பிக்பாஸில் சிவானியை அவரது தாய் கண்டித்தது குறித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது . இதில் முதல் முதலில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் . ஆனால் அவர் அங்கு சிவானியிடம் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது . மோசமான வார்த்தைகளால் ஷிவானியை அவரது தாயார் திட்டியது குறித்து பலர் பெற்ற மகளை இப்படியா அசிங்கபடுத்துவது என கருத்துத் தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இவரது செயலை பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் . அதில் ‘நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை . ஆனால் அந்தத் தாய் அவரது மகளை அசிங்கப்படுத்தியது எனக்கு தவறாக தெரிந்தது . உங்கள் கேரக்டரை அசிங்கப்படுத்தும் தாய் உங்களுக்கு இல்லை எனில் நீங்கள் அதிர்ஷ்டமானவர்கள் என உணருங்கள் .
சிலர் அவதூறாக பேசுவதை கேட்டுக்கொண்டு பல அம்மாக்கள் பெற்ற மகள்களை அசிங்கப்படுத்துவதாள்தான் அந்த மகள்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்க காரணமாக உள்ளது . உங்கள் மகளின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு ஒரு பொறுப்பான பெற்றோராக பேசுங்கள் . பிக்பாஸில் அனிதா என்கிற போட்டியாளரை பலரும் கிண்டல் செய்வதாக கேள்விப்பட்டேன் . அவரின் தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் நடக்கும் கொடூரத்தை தவிர்த்து தன் கடைசி நாட்களில் எதை பார்த்தார் என்று வியக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.