Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்சனா!… வெளியேறப் போவது யார்? யார்? … வலைத்தளங்களில் கசியும் தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ஆஜித் மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சம்யுக்தா ,சுசித்ரா, சனம், ரமேஷ் ,நிஷா ,அர்ச்சனா ,அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்த சீசன் முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தற்போது எட்டு பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர் .

இவர்களில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் கடைசி மூன்று வாரம் ஆறு அல்லது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே  இருப்பார்கள். இதனால் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூகவலைத்தளங்களில் மக்களின் குறைவான வாக்குகள் ஆஜித் மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |