புதுவகை கொரோனாவால் இந்தியாவில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவில் இருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதியதாக வீரியமிக்க உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் வீரியமிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகை கொரோனா முந்தைய கொரோனாவை விட வேகமாக பரவும் என்றும், வீரியமிக்கதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த புது வகைக் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் வைத்து பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 5 பேர் பாதிக்கப்ப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.