Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க அனுமதி… மார்ச் 1 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பொதுத் தேர்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஜூலை 15ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்முறை, திட்டம், உள் மதிப்பீட்டை நடத்த மார்ச் 1ம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது நடத்தப்பட்டுவரும் 70% பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |