Categories
மாநில செய்திகள்

தமிழ்வழி மாணவர்கள் புறக்கணிப்பு – டிஎன்பிஎஸ்சி விளக்கம்…!!

தமிழ்வழி மாணவர்களை தேர்வில் புறக்கணித்துள்ளது என்ற தகவல் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடந்து முடிந்த 18 தொல்லியல் அலுவலர்கள் பதவிக்கான தேர்வில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு கலந்தாய்வு மூலமாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு முதுகலை தமிழ், வரலாறு, தொழில் மற்றும் தொழில் முதுகலை பட்டப்படிப்பில் இளங்கலையில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள். மேலும் 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கான 18 மாணவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழக அரசின் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவி ஒருவரும் தேர்வாகியுள்ளார். பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்து தமிழக மாணவர்கள் புறக்கணிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |