Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொறியியல் மாணவர் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் குடும்பத்தினர்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

சேலத்தில் கல்லூரி  மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரயில்வே துறையில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திவாகர் என்ற மகன் உள்ளார் . திவாகர் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார் . இந்நிலையில்  நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று திவாகர்  தூங்கச் சென்றுள்ளார்.

ஆனால் நேற்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திவாகர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் அவருடைய தந்தை குணசேகரன் மாடிக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போதும்  திவாகர்  கதவை  திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு திவாகர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வந்து திவாகரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |