Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டு அலமாரியில் 1 கப் அரிசி வைங்க…. அப்புறம் அதிசயம் நடக்கும் பாருங்க…!!

அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமையல் அறையை தவிர வேறு எந்த இடங்களில் எல்லாம் இந்த அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதோ சமையலறைக்கு வெளியே அரிசி சம்பந்தப்பட்ட ஏராளமான பயன்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம்.

1.உங்கள் ஸ்மார்ட் போனை நீர் சேதத்தில் இருந்து காப்பாற்ற ஒரு அரிசி பையில் செல்போனை வைத்தால் உலர்ந்த அரிசி ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

2.சில நேரங்களில் நமது அலமாரிகள் ஈரப்பதத்துடன் காணப்பட்டாலோ அல்லது துவைத்த துணிகள் நன்றாக உலருவதற்கு முன்பே அதை உங்கள் அலமாரியில் வைத்தாலோ துணிகளில் ஊசல் வாடையை வரும் இதை நீக்க அரசியில் சில துளி அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்து ஏர் ஃப்ரெஷனர் பயன்படுத்தலாம். இதனால் அலமாரி அழகான நறுமணத்தை பெரும்.

ஏர் ஃப்ரெஷனர் தயார் செய்வதற்கு:

தேவையானது:

1.ஒரு கப் அரிசி (வெள்ளை அரிசி நன்றாக உதவும்) கொஞ்சம்.

2.அத்தியாவசிய எண்ணெய்.

3.ஒரு கிண்ணம், ஒரு சிறிய துணி மற்றும் ஒரு எலாஸ்டிக் பேண்ட்.

ஒரு பாத்திரத்தில் 15 முதல் 20 சொட்டு அத்தியாவசிய எண்ணெய் மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சுவாசிக்கக் கூடிய தன்மை உடைய ஓர் துணியை (பழைய டி-ஷர்ட் போன்ற ஏதேனும் ஒன்று) எடுத்து அதை கொண்டு கிண்ணத்தை நன்றாக மூடி வைக்கவும். பின்னர், அந்த துணியின் மீது ஒரு எலாஸ்டிக் பேண்ட் போட்டு கட்டவும். பின்பு, இந்த அரிசி கிண்ணத்தை உங்கள் அலமாரியில் ஏதேனும் ஒரு இடத்தில் வைக்கவும்.இதை வைக்கும் போது குழந்தைகள் கையில் பெற முடியாதபடி ஓர் இடத்தை தேர்வு செய்யவும். மேலும், சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் இந்த ஏர் ஃப்ரெஷனரை அவசியம் மாற்ற வேண்டும். ஒருவேளை, நீங்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை (ப்ரவுண் ரைஸ்) பயன்படுத்தினால், அதை விரைவில் மாற்ற வேண்டும். ஏனென்றால், பழுப்பு அரிசி வெள்ளை நிற அரிசியை விட விரைவாக கெட்டுவிடும்.

 

Categories

Tech |