பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.
இந்தியாவில் அரசு வழங்கும் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட். ஆதார் அட்டை போன்ற பான் கார்டும் ஒரு அடையாள அட்டை தான் .அனைத்து விதமான பரிவர்த்தனைக்கும் பயன்படும் பேன் கார்ட் மிக முக்கியம். பத்து இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டு ஒரு நபரின் நிதி நிலையை பற்றி தகவல் அறிய உதவுகிறது. பான் கார்டு வங்கி அல்லது தனிநபரின் இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கலாம். பணி, வணிகம் செய்வதற்கு, ஐடிஆர் தாக்கல் செய்யவும் பான் கார்டு மிகமுக்கியம்.
வரி கட்டுபவர்கள் மட்டுமே பான்கார்டு பயன்படுத்துவார்கள்.PAN Card தொடர்பான முக்கிய விதிகளை வருமான வரித்துறை தனது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளது. பேன் கார்டு இல்லாமல் உங்கள் உண்மையான வரித் தொகையின் அளவை அறிய முடியாது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் ஒரு தனி நபர் வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 139 கீழ் வந்தால் அவர் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்தப் பிரிவின் கீழ் குறிப்பிட்ட வருமானத்தின் கீழ் வரும் ஒவ்வொரு நபரும் வருமானவரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ஆனது வரம்பில் இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சில முக்கிய பணிகளுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் அதற்கு மேற்பட்ட அசையா சொத்துக்களை வாங்கும் போது, 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை செய்யும்போது பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் FD அல்லது RD போடும்போது, 50 ஆயிரத்துக்கும் அதிகமாக ஆயுள் காப்பீட்டு பிரீமியம் எடுக்க, பங்குசந்தையில் முதலீடு செய்ய பான் கார்டு மிக அவசியம்.