Categories
கிரிக்கெட் விளையாட்டு

“5 வீரர்களை கழட்டி விடப்போகும் சிஎஸ்கே”… யார் அந்த 5 பேர்..? வெளியான தகவல்..!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம்.

இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது.

வரும் ஆண்டில் யார் விளையாடப் போவது? யார் தொடர்ந்து வெளியேறப் போவது? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐபிஎல் தொடர் நிர்வாகம் இன்னும் சில நாட்களில் வெளியீடும். அதற்காக தற்போது இருந்தே ஏலத்திற்கு ஐபிஎல் அணிகள் தயாராகி வருகிறது. சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்க உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தோராய பட்டியலில் சிஎஸ்கேயிலிருந்து ஹர்பஜன்சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர் உறுதியாக நீக்கப்பட உள்ளனர். அதேபோல் கரண் சர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். சிஎஸ்கே அணியில் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, பிராவோ, சாம் கரன், டு பிளசிஸ் ஆகியோர் மீண்டும் எடுக்கப்படுவார்கள். நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |