Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு… என்னென்ன தளர்வுகள்..? எதற்கு தடை..? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனையில் புதிய வகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களில் அரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கவேண்டும்.

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. நேரக் கட்டுப்பாடுகள் இன்றி வழித்தடங்களில் வழக்கமான நேர நடைமுறைகளில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |