Categories
மாநில செய்திகள்

“ரஜினி தான் என் வாழ்க்கை”…. கடைசி பதிவை போட்டுவிட்டு…. உயிரை விட்ட ரஜினியின்…. தீவிர ரசிகர் ராஜ்குமார்…!!

ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் விரக்தியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதனால் தான் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். அவருடைய இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் சில ஆதரவு தெரிவித்தன. மேலும் அவருடைய பல ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு “எழுந்து வா தலைவா” என்று கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(34). இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ரசிகனின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து அவர் விரக்தியில் இருந்துள்ளர். இதையடுத்து “ரஜினிதான் என்னுடைய வாழ்க்கை இதுவே என்னுடைய கடைசி பதிவு” என்று பதிவை போட்டுவிட்டு நண்பர்களுடன் புலம்பியபடி நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றுள்ளார். இதையடுத்து மரணப்படுக்கையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது அவர்களுடைய குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரிடம் இறப்பிற்கான காரணம் என்று விசாரித்து வருகின்றனர். மேலும் ரஜினியின் தீவிர பக்தனான ஒருவர் தன்னுடைய ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தினால் தன்னுடைய உயிரையே கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |