Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நேற்று இரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருடன் இரவு முழுவதும் நாயொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் பலத்தை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி நேற்று சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை பார்த்த நாய், “தனியாக இருப்பதாக கவலைப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்பதை உணர்த்தும் விதமாக இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மேலும் பெண் காவலர் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |