Categories
மாநில செய்திகள்

விஜய் கோரிக்கை நிராகரிப்பு… முதல்வர் எடுத்த முடிவு… வேதனை அடைந்த விஜய்…!!!

தமிழகத்தில் முதல்வரிடம் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று விஜய் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகளுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |