Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” 22 நாட்கள் தாயின் சடலத்தோடு…. உறங்கிய குழந்தைகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தைகள் தனது அம்மா தூங்குவதாக நினைத்து சடலத்துடன் 22 நாட்கள் உறங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இந்திரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாகஇந்திராவின் சகோதரியான வாசுகியும் வந்து தங்கியுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த காவலர் இந்திரா காவல் துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் ஓய்வு பெறுவது குறித்து எந்த தகவலும் மேலதிகாரிகளுக்கு முறையாக தெரியாமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் அடிக்கடி விடுமுறை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு இந்திரா வீட்டிற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். ஆனால் இந்த வீட்டில் இந்திரா இல்லை என்று கூறி  குழந்தைகளும், இந்திராவின் சகோதரியும் காவல்துறையினரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்திராவின் வீட்டில் பரிசோதனை செய்தபோது இந்திராவின் சடலம் துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, “எங்கள் அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலையில் எழுந்து விடுவார். அவருடைய தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்” என்று சாதாரணமாக கூறியுள்ளனர். மேலும் தாயாரின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத அந்த குழந்தைகள் என் அம்மாவின் துக்கத்தை கெடுப்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார் என்று மிரட்டியுள்ளனர். மேலும் இந்திராவின் சகோதரியும் என் தங்கை உயிருடன் தான் இருக்கிறார் என்று கூறி காவல் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

இதையடுத்து இந்திரா உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும் இந்திராவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் சிகிச்சை அளிக்காமல் வீட்டில் வைத்துக் கொண்டு சுகமாக்குவதாக பிரார்த்தனை செய்துள்ளார்.

சர்ச் பாதிரியார் இந்த தொடர் பிரார்த்தனையின் காரணமாக தற்போது குழந்தைகள் மற்றும் இந்திராவின் சகோதரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்து 22 நாட்கள் சடலத்தோடு குழந்தைகள் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டுதான் இந்திரா இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு அந்த பாதிரியார் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |