புதிய வகை வீரியமிக்க கொரோனா தற்போது சீனாவிலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் முதன் முதலில் கொரோனா தொற்று பரவியது. அதையடுத்து படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி தற்போது இது கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் இந்த புதிய வீரியமிக்க கொரோனா முந்தைய வைரசை விட தீவிரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சீனாவிற்கு திரும்பிய அந்த நகரை சேர்ந்த 23 வயது மாணவிக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு சுகாதார துறையினரால் மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரை 57 ஆயிரத்து 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.