தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் உன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உருமாறிய கொரோனாவால் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் 6 படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.