Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகை மற்றும் பணத்திற்காக… மர்ம நபர்களால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… திருச்சி அருகே பரபரப்பு…!!

நகை மற்றும் பணத்திற்காக பெண் வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹபிபா பீவி(68).  இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனியாக இருந்த ஹபிபா பீவி ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அவர் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் துவரங்குறிச்சிக்கு  திரும்பியுள்ளார். பின்னர் அங்குள்ள ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

தினமும் காலையில் தண்ணீர் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஹபிபா பீவியை  எழுப்புவதை  வழக்கமாக கொண்டிருந்தனர் . இன்று காலை  வழக்கம்போல் அவர்கள் ஹபிபா பீவியை  எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால்  சந்தேகமடைந்த பெண்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள்  ஹபிபா பீவி ரத்தவெள்ளத்தில் கொடூரமாக  இறந்து கிடந்தார். இதை பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்றனர் . அப்போது ஹபிபா பீவியின் கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டதுடன் அவரது கழுத்தில் நைலான் கயிறு இறுக்கப்பட்ட அடையாளமும் இருந்தது.  மேலும் அவரது முகம் முழுவதும் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. அவர்  இறந்து கிடந்த இடத்திற்கு அருகிலேயே  அந்த கல்லும் கிடந்தது.

அவர்  தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே கொலை செய்த நபர்கள் யார்? என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹபிபா பீவி துணிகளை விற்று  வந்த வருமானத்தில் நகை மற்றும் பணத்தை  சேர்த்து வைத்துள்ளார். இதை  நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். ஹபிபா பீவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.மேலும்  சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

Categories

Tech |