இளம்பெண் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள lampeth என்ற நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Azariya williams என்ற 26 வயதுடைய இளம்பெண் அங்குள்ள ஒரு வீட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக அவசர உதவி குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த அவரச உதவி குழுவினர் williams க்கு முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி williams பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் கொலை செய்ததாக மார்க் அலெக்சாண்டர் என்ற 27 வயது இளைஞரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.