குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் தவித்த செண்பகவள்ளி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செண்பகவல்லி தாயார் மாரம்மா அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்