கடலூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் ஜவஹர். இவரது மகள் நந்தாதேவி (19).இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று நந்தாதேவி படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாய் படிக்காமல் செல்போனில் ஏன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று அவரை கண்டித்ததோடு செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த நந்தாதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தாதேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நந்தாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.