Categories
மாநில செய்திகள்

“நலமாக இருக்கிறேன்” மகிழ்ச்சியுடன்…. புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி…. வெளியான வீடியோ…!!

ரஜினி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாக குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் குஷியில் இருந்தனர். அதே நேரத்தில் அரசியல் கட்சியினர் பலரும் பீதியில் இருந்தனர். இதையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படப்பிடிப்பின்போது படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை.

இருப்பினும் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவ நிர்வாக குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், “கடவுள் அருளால் நான் நலமாகவும், சந்தோஷமாக இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது ” என்று கூறியதுடன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |