தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வீட்டு வசதி திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த 2023 வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த திட்டத்தினை வீடு கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் தமிழகத்தில் மட்டும் 1, 151 வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர், துணைமுதலமைச்சர், மேலும் பல அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம், மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம், மற்றும் பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும். இந்த நிகழ்வின் போது, குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வீட்டு வசதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு விருதுகளையும் வழங்கியிருக்கிறார்.