Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(02-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

02-01-2021, மார்கழி 18, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

 ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மகம்.

 மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு அமிர்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 சங்கடஹர சதுர்த்தி விரதம்.

 விநாயகர்-நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

நாளைய ராசிப்பலன் –  02.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். வீட்டில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் உத்தியோகத்தில் லாபம் கிட்டும். உறவினர்கள் ஓரளவு ஆதரவு கொடுப்பார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உண்டாகும். வீட்டில் கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும் அதற்கேற்ப செலவும் இருக்கும். உத்தியோகம் சம்பந்தமாக பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். உத்தியோக ரீதியில் கொடுக்கல் வாங்கல் லாபத்தை கொடுக்கும். புதிய நவீன கருவி வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகள் நீங்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் தொல்லை நீங்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  உறவினர் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். கடன் பாக்கி கைக்கு வந்து சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எதிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். வீட்டில் அமைதியும் ஒற்றுமையும் உண்டாகும். வெளி பயணங்களால் அனுகூலம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டாகும். சேமிப்புகள் உயரக்கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாத மனக் குழப்பம் இருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் போட்டி பொறாமை நீங்கி நிம்மதி இருக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் தடைகள் இருக்கும்.தமிழ் ச***** வீடியோ கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.தொழிலில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் வேண்டும்.

மகரம்

உங்கள் ராசிக்கு மன அமைதி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். எலி பயணங்களால் அனுகூலம் இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி உண்டாகும். தொழிலில் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரியம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் செலவு கட்டுக்கு அடங்கி இருக்கும். பயணங்களாலும் அனுகூலம் இருக்கும். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு இருக்கும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். வாகனங்களால் சிறு தொகை செலவிடப்படும். சேமிப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உற்றார் உறவினர் உதவியால் உங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

Categories

Tech |