Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற சிறுமி… 2 பேரால் சீரழிக்கப்பட்ட வாழ்க்கை…!!!

ஆற்காடு அருகில் பத்தாம் வகுப்பு சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆகியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காடு பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். அவரை சங்கரமல்லூர் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷன் சதீஷ் காதலித்து பின்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஏழுமலை என்பவரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அச்சிறுமியை தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையடுத்து ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷ் மற்றும் ஏழுமலையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு இருவரையும் கைது செய்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |