பவானி அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 25 வயதுடைய அன்பரசு எனும் மகன் இருக்கிறார். அன்பரசு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதன்பின் அம்மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூட்டி சென்று விட்டார்.
அன்பரசு மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் குழந்தை நல அலுவலர்ஒருவர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பரசை கைது செய்தனர்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமியை இளைஞன் ஒருவர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.