வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி தானாகவே டெலிட் ஆகிவிடும்.
நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வீடியோ கால் பேசுகிறார்கள். அவ்வாறு வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் சேவை விதிமுறைகளை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதுப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நீங்கள் ஏற்காவிட்டால் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு தானாகவே எந்த நேரத்திலும் நீக்கப்படலாம். மேலும் பயனர்களின் ஷாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும் பேஸ்புக் வழங்கும் சேவைகளை பணிகள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும். இது பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.