Categories
தேசிய செய்திகள்

இனிமேல் கடைகளில் பொருள் வாங்கினால்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

இனிமேல் ஷாப்பிங் மால் மற்றும் கடைகளின் கேரி பேக்குகளுக்கு தனியாக பணம் வசூல் செய்யக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாம் அனைவரும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது கேரி பேக்குகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அனைத்து கடைகளிலும் கேரிபேக் உங்களுக்கு தனியாக பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பணம் வசூல் செய்யக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் ஷாப்பிங் மால் மற்றும் கடைகளில் கேரி பேக்குகளுக்குதனியாக பணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் தனியாக கேரி பேக்கை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இலவசமாக வழங்கப்படும் கேரிபேக்குகளுக்கு தனியாக பணம் வசூல் செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |