கொரோனாவை சிவப்பு எறும்பு குணப்படுத்துமா என்று 3 மாதங்களில் ஆய்வு செய்ய ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் நிலையில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில மருந்து நிறுவனங்களின் மருந்துகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் இயற்கை மருந்துகளான மஞ்சள், சீரகம் மற்றும் மிளகால் செய்யப்பட்ட ரசம் கொரோனா நோயை குணப்படுத்தும் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மலைகளில் சிவப்பு எறும்புகளுடன், பச்சை மிளகாய் அரைத்து சட்னி செய்கின்றனர். இது சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற நோயுள்ளவர்களுக்கு மருந்தாகவும் கொடுக்கின்றனர். இதனால் நோய் குணமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்த இந்த சிவப்பு எறும்பு சட்னியை பயன்படுத்தலாம் என்று பரிபடாவை சேர்ந்த பொறியாளர் நயாதார், பொதுநலன் மனுவைத் தாக்கல் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு 3 மாதங்களுக்குள் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதில் கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.