Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

கன மழை பெய்ததால்… அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு… தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!

அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263  கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடனாநதி அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.  இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

Categories

Tech |