கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூலாமலை என்ற பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜெயக்குமார் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தவறுதலாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து ஜெயக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அனால், சிகிச்சை பலனளிக்காமல் ஜெயக்குமார் அங்கேயே இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.