Categories
மாநில செய்திகள்

வரும் 4 ஆம் தேதி முதல் – இரவு 11.15 மணிக்கு…!!

வரும் 4 ஆம் தேதி முதல் இரவு 11.15 க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்துபெங்களூரு, மைசூரு, திருநெல்வேலி – பாலக்காடு, திருச்சி – ராமேசுவரம் மார்க்கங்களில் வரும் 4-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 4-ம் தேதி முதல் சிலமுக்கிய மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்து . திருச்சி-ராமேஸ்வரம், பாலக்காடு- நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் இரவு 11.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக பாலக்காடு சென்றடையும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |