இந்த அறிகுறிகள் இருந்தால் ஆன்டிபயாடிக் மாத்திரை வேலை செய்யவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் நம் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கில் நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் இருக்கின்றன. ஆன்டிபயாட்டிக்குக்கு “ஆன்டிபாக்டீரியல்’”என்றும் அழைக்கப்படுகின்றது. இது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும்.
இந்நிலையில் முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான செயல் தடைபடும். தற்போது 64% மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும்போது முதலில் ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக் கொள்வது பலர் வழக்கம். ஆனால் அது வேலை செய்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள மருந்து எடுத்து மூன்று நாட்கள் ஆகியும் அந்த நோய் கட்டுக்குள் வராமல் இருப்பது, கடும் வயிற்று வலி, அவ்வப்போது வயிற்றுப்போக்கு, சருமத்தில் கட்டி,வீக்கம் ஆகிய திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்டிபயாட்டிக் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகவும்.