Categories
மாநில செய்திகள்

Breaking: இன்னும்சற்று நேரத்தில் – தடுப்பூசி ஒத்திகை…!!

தமிழகத்தில் கொரோனா தடுப்புசிக்கன ஒத்திகை இன்று 17 இடங்களில் 8.30 மணிக்கு தொடங்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வேகமெடுத்து வந்ததால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த விலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் இன்னும் சற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா தமிழகத்திற்கும் பரவியுள்ளது. இது வீரியமிக்க கொரோனா என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை இன்னும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 17 இடங்களில் 8.30 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற உள்ளது. தடுப்பூசியை செலுத்துதல் குறித்து திட்டமிடல், மதிப்பிடுதல் சவால்களை அடையாளம் கானுதலுக்கான இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

Categories

Tech |