காற்று மண்டலத்தில் மனிதர்களின் செயல்பாடுகளால் மாசு அடையாத பகுதி இங்கு தான் உள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் மனிதர்கள் செயல்பாடுகளால் காற்று மாசுபாடு அடைந்துள்ளது. மனிதர்களின் செயல்பாடுகளான குப்பைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை ஆகியவற்றால் காற்று அசுத்தமடைகிறது. மேலும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடித்தல் போன்றவற்றினாலும் காற்று அதிகமாக மாசடைகிறது. டெல்லியில் காற்று அதிகமாக மாசடைந்துள்ளது. மேலும் காற்று மாசு காரணமாக வளிமண்டலத்தில் ஓசோன் படலம் பாதிப்படைந்துள்ளது.
இதையடுத்து சுத்தமான காற்று இல்லை என்றால் காரணமாக காற்று கூட விற்பனை செய்யும் அளவிற்கு பூமியில் நிலை மாறிவிட்டது. இந்நிலையில் காற்று மண்டலத்தில் மனிதனின் செயல்பாடுகளால் மாற்றங்கள் அடையாத சுத்தமான காற்று உள்ள பகுதியை கொலராடோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிக் பெருங்கடலில் 40 டிகிரி தென் அட்ச ரேகையில் உள்ள இந்த இடத்தில் காற்றில் தூசிப்படலம் எதுவும் இல்லை. இந்த ஆய்வுக்கு காற்றிலுள்ள பாக்டீரியா உள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது.