முகேஷ் அம்பானி முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக செபி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானி. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முகேஷ் அம்பானி மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து 2007ஆம் ஆண்டு முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிக்கு ரூபாய் 25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும் அபராதம் விதித்து, செபி உத்தரவு பிறப்பித்துள்ளது.