நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தற்போது ‘பூமி’ படம் தயாராகியுள்ளது . இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . வருகிற பொங்கல் தினத்தில் இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது . இதையடுத்து நடிகர் ஜெயம்ரவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
As we celebrate new beginnings, @Screensceneoffl is proud to announce the first step with the very talented genre – bending Star actor @actor_jayamravi with #JR28 directed by Kalyanakrishnan. More updates to follow soon 💥💥💥@sidd_rao @nixyyyyyy @onlynikil @CtcMediaboy pic.twitter.com/z8T5ZEIWH0
— Screen Scene (@Screensceneoffl) January 1, 2021
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் 28வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது . ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார் . புத்தாண்டு தினத்தில் வெளியான இந்த அறிவிப்பால் ஜெயம்ரவி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் . மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.