Categories
தேசிய செய்திகள்

உங்கள் பி.எப் கணக்கில் பணம் சேர போகுது… இனி என்ஜாய் தான்…!!!

இனி ஊழியர்களின் பிஎஃப் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேரும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2019 நிதி ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 8.5% வட்டியை ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. இத்தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டும் பி.எப்., கணக்கிற்கு மத்திய அரசால் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் வழங்கியது. விரைவில் தொழிலாளர் அமைச்சகம் இதனை அரசாணையில் வெளியிட்டுள்ளது.

இதனால் பி.எப்., மீதான வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கியுள்ளது. டிச., 31-ல் ஓய்வு பெற்றவர்களுக்கும் 8.5% வட்டியுடன் பி.எப்., தொகை அளிக்கப்படும். பி.எப்., இருப்புத் தொகை அறிய, இ.பி.எப்.ஓ., தளத்தில் பதிவு செய்துள்ள உங்களின் மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால், பண இருப்பு விவரங்கள், யு.ஏ.என்., எண்ணுடன் குறுஞ்செய்தியாக வந்துவிடும். யுமேங்க் (UMANG) செயலி மற்றும் இ.பி.எப்.ஓ., இணையதளம் மூலம் விரிவான பாஸ்புக்கை பார்க்கலாம்.

Categories

Tech |