உலகில் 30 நகரங்களில் திடீரென தோன்றிய மொனோலித் எனப்படும் உலோகத் தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன்முறையாக தோன்றிய இந்த உலோகத் தூண் சில நாட்களில் தானாக மறைந்து. இதையடுத்து ருமேனியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து தோன்றியது. இது யார் அந்த துணை நிறுவியது என்று பலரும், ஆராய்ச்சி செய்து வந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் சில நாட்களில் எப்படி மர்மமான முறையில் மாயம் ஆகிறது என்பதையும் ஆய்வு செய்து வந்தனர்.
இங்கிலாந்தில் ஏற்கனவே மூன்று பகுதிகளில் இங்கு தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேரி மெயின்டனன்ஸ் நடுவில் நான்காவது தூணும் கிடைக்கப்பெற்றது. உலகில் மொத்தம் 30 நகரங்களில் திடீரென தோன்றிய இந்த மர்ம உலகம் தற்போது இந்தியாவில் ஒரு இடத்தில் தோன்றியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்ம தூண் பார்த்ததாக தெரிவிக்கின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் இந்த ஒற்றைத் உலோகத்தால் ஆன உலோகத் தூண் கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் கொண்டது போன்று தென்பட்டதாக கூறியுள்ளனர். இந்தியாவில் இதுவே முதன்முறையாகும். பூங்காவின் பணிபுரியும் தோட்டக்காரர் ஆசாராம் இதுபற்றி கூறுகையில் நான் மாலை வீடு சென்று கொண்டிருந்த போது அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்கு திரும்பியபோது அந்த உலகத்தின் அங்கு இருந்தது. இந்த உலோகத் தூண் அகமதாபாத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்து வந்த மக்கள் அதனுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.