தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் தற்போது பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார்.
கேரளா மாநிலம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ஆனந்தவள்ளி. இவர் தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த இவர் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக பணியாற்றிய போது அவருக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில்தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் அவருடைய வாழ்க்கையைமாற்றியுள்ளது .
அவர் தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் மிகக் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். சி.பி.எம். கட்சியின் ஆதரவால் மட்டுமே இது நடந்ததாக ஆனந்தக் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். இத்தனை வருடங்களாக அலுவலகத்தை தூய்மையாக வைத்திருப்பதற்காக அவர் ஓயாமல் பணியாற்றியுள்ளார். தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளே நுழைந்த அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கேரளாவில் 23 வயது பெண் மேயராக பதவியேற்றது நடந்தது. கேரளாவில் மட்டும் தான் மாற்றம், முன்னேற்றம் எல்லாம் நடக்குமா நம் நாட்டிலும் நடக்காதா? என்ற கேள்வி நம் ஒவொருவருக்குள்ளேயும் எழுகின்றது.