குற்ற சம்பவங்களின் அடிப்படையில் மக்கள் வாழ ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் அதிக திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறை தாக்குதல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ ஆபத்தான இடங்களின் தரவரிசை பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என்ற பட்டியலில் கிளேவ் லேண்ட் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு 1000 மக்களில் 99.4 வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன. மேலும் வெஸ்ட் யார்க்ஷயர் கடந்த வருடம் முதலிடத்தில் இருந்துள்ளது.
தற்போது இந்நகரம் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து சவுத் யார்க்ஷயர், டர்ஹாம், ஹம்பர்சைடு, கெண்ட், கிரேட்டர், மேன்செஸ்ட்டர் போன்ற நகரங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. மேலும் பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆயிரம் மக்களில் 80.3 பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் குறைவான வன்முறைகளுடன் அதாவது ஒவ்வொரு 1000 மக்களில் 45.8 குற்றங்களுடன் மக்கள் வாழ சிறந்த பகுதிகளில் முதலிடத்தில் உள்ளது.