தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம் ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் துவகத்தில் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை 549 டாலர், அதாவது 59,900 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைவிட அதிக விலைக்கு நீங்கள் வாங்க விரும்பினால், இன்னொரு ஹெட்போன் விலை 108,000 டாலர், அதாவது 80 லட்சம் ரூபாய், இது தூய தங்கத்தால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.