இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரான பூட்டா சிங் திடீரென உயிரிழந்ததால் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் முன்னாள் உள்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் இவர் 2007 முதல் 2010 ஆம் ஆண்டுகளில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவரின் மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.