பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ஒருவர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு ஆஜித்துக்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர் . தற்போது ஆஜித் பிக்பாஸில் இருந்து வெளியேறி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது . இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.