பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது . இதையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் மீண்டும் ஆரி- பாலா இடையே மோதல் வெடித்துள்ளது. அதில் ஆரியிடம் ‘காதல் கண் கட்டுதேன்னு சொன்னிங்களே எனக்கு காதல் இருக்கு என்பதை நீங்க பாத்தீங்களா? என்கிறார் பாலா .
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/x8i1v5qCmn
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021
இதற்கு பதிலளித்த ஆரி ‘இவ்வளவு தைரியமானவனா இருந்தா அன்னைக்கு சிவானியின் அம்மாவிடம் பேசி இருக்க வேண்டியதுதானே’ என்கிறார். இதையடுத்து கடுமையான வாக்குவாதம் நடைபெறுகின்றது. மேலும் ஷிவானி பற்றி ஆரி பேசியவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாலா தலையணையை தூக்கி வீசுகிறார் . இப்படி பரபரப்பா வெளியாகியுள்ள முதல் புரோமோவால் இன்றைய எபிசோடைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் .