பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி அடிதடி நடப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதனையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. நேற்று மைக்கேல் சேதப்படுத்தும் வகையில் பாலா நடந்து கொண்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மீண்டும் ஆறு மற்றும் பாலா இடையே மோதல் நடந்துள்ளது. அதில் ஆரியை பார்த்து “காதல் கண் கட்டுதேனு சொன்னீங்களே எனக்கு காதல் இருக்கு என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று பாலா கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த ஆரி, “இவ்வளவு தைரியமானவனா இருந்தா அன்னைக்கு சிவாணிவின் அம்மாவிடம் பேசி இருக்க வேண்டியதுதானே” என்று கூறுகிறார். இதையடுத்து இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. மேலும் ஷிவானி பற்றி ஆரி பேசியவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாலா சோபாவில் இருந்த தலையணையை தூக்கி வீசுகிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/x8i1v5qCmn
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021