தலையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முல்லக் குடியில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டியும், அதனோடு கருப்பு தினமாக புத்தாண்டு தினத்தை அனுசரிக்க வேண்டியும் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் தலையில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு வயலில் இறங்கினர்.
இந்த போராட்டமானது தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினராகிய சிவகுமாரின் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூதலூர் ஒன்றிய விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகேசன், சேகர், காசிநாதன் உதயகுமார் போன்ற பலர் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.