நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி . தற்போது இவர் நடிப்பில் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’ . கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராமச்சந்திர ராஜா, பிரபாகர் உட்பட பலர் நடித்துள்ளனர் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் .
Very happy to release #KodiyilOruvan teaser.
Wish you all success dear @vijayantony and entire team.Directed by @akananda pic.twitter.com/1vhCqkqe2a
— Karthi (@Karthi_Offl) January 2, 2021
இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டீஸரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் வசனங்களும் உள்ள இந்த டீஸர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது .