கன்னி ராசி அன்பர்களே..!
இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட நேரிடும். வீண் அலைச்சலை குறைக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். கற்பனை திறன் அதிகரிக்கும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம்.
குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். மனைவியிடம் அளவற்ற அன்பை வெளிப்படுத்துவீர்கள். காரியத்தில் இருந்த தடை விலகிச்செல்லும். பணவரவு சீராக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.