Categories
உலக செய்திகள்

மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தற்போது வரை மீளமுடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி விட்டது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டின் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிய கொரோணா பரவலை கட்டுப்படுத்துவதற்கு 15 மண்டலங்களில் இரவு நேர ஊரடங்கை மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து பிரான்ஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற பகுதிகளில் ஊரடங்கு இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட 15 பகுதிகளில் மட்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு தொடங்கும். தலைநகரான பாரிசில் ஊரடங்கும் நேரம் நீட்டிக்க படவில்லை. இது பற்றி வெளியான செய்தியில், “பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு கொரோனா பாதிப்பு வேறுபடுகிறது. அந்தப் பகுதிகளில் நிலைமை மோசமடையும் சூழல் ஏற்பட்டால், கட்டாயம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அனைத்து மருத்துவ மனைகளும் நிரம்பி வழிகின்றன. அதிலும் சில பகுதிகளில் சுகாதார அமைப்பு சமாளிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி ஜனவரி 7ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் கச்சேரி அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது

Categories

Tech |