Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மூன்று நிறங்கள், முழுமையான சத்து… உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்…!!!

நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் மூன்று வகையான நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது அனைத்து வகையான சத்துக்கள் கிடைக்க வழி செய்யும்.

நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து, அதனை குறைப்பதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் ஒருவர் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது கடினமாகவே உள்ளது. இந்நிலையில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள மருத்துவ வட்டாரங்கள் சுலபமான வழி ஒன்றை பரிந்துரைக்கின்றன. நாம் தினமும் சாப்பிடும் உணவில் மூன்று வகையான நிறமுள்ள பழங்களையோ காய்கறிகளையோ எடுத்துக்கொள்ளும் போது அனைத்து வகையான சத்துக்களும் கிடைக்க வழிவகுக்கும்.

Categories

Tech |